Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவறு செய்தவர்களை விட மாட்டோம்”- ஆதவ் அர்ஜூனா

தவறு செய்தவர்களை விட மாட்டோம்"- ஆதவ் அர்ஜூனா

அன்பில் மகேஸ் கைது நடவடிக்கையில் எந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். 

செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “அன்பில் மகேஸ் கைது நடவடிக்கையில் எந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லை.  யாரையும் பழிவாங்க வேண்டிய அவசியமில்லை. தவறு செய்ய மாட்டோம், தவறு செய்தவர்களை விட மாட்டோம். திமுக ஆட்சியில் பள்ளி பாதுகாப்பு சான்றிதழ் கொடுத்ததில் முறைகேடு நடந்துள்ளது. நெடுஞ்சாலை துறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. திருச்சியில் அன்பில் மகேஷ் சொன்னா தி.மு.க-ல 10 எம்.எல்.ஏ ஜெயிக்க போறாங்களா..? அவரே தோற்று போய் தான் இருக்கார். தோல்வியுற்றவரை கைது செய்வது அரசியல் பழிவாங்கலா..? ஊழல் செய்த யாரும் இன்றைய முதல்வரிடம் எந்த டீலிங்கும் செய்ய முடியாது. ஊழல் செய்தவர்களை விட மாட்டோம் என் அன்றைக்கு முதல்வர் விஜய் சட்டசபையில் சொன்ன போது ஆதாரம் இருந்தால் நிரூபியுங்கள் என கிண்டலாக பேசினார் உதயநிதி..!  முன்னாள் அமைச்சர்கள் பலர் தொடர்ச்சியாக பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டுள்ளனர். ஆதாரங்களின் அடிப்படையிலேயே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

திமுக ஆட்சியில் தேர்தலுக்கு முன்பாக ரூ.2 ஆயிரம் கோடிக்கு நெடுஞ்சாலைத் துறையில் பேட்ச் வொர்க் பார்த்ததாகச் சொல்லி பணம் எடுத்திருக்கிறார்கள். பத்துப் பத்து லட்சமாகப் போட்டு பலருக்கும் பணம் கொடுத்திருக்கிறார்கள். இதையெல்லாம் மறைக்கத்தான் மதச்சார்பின்மை, சமூகநீதி என திசைதிருப்பி இருக்கிறார்கள்.  தோற்றவரை கைது செய்திருப்பதிக் அரசியல் பழிவாங்கல் கிடையாது. இதற்கு முன்பு, பலரும் ஊழல் செய்ததாக ஸ்டாலின் சொன்னார். ஆனால், யாரையும் கைது செய்யவில்லை. ஏனென்றால் அண்டர் ஸ்டாண்டிங் ஆகிவிட்டார்கள். ஆனால், முதல்வர் விஜய் அப்படி இல்லை. தவறு செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த நினைக்கிறார்., மக்களிடம் உண்மையை எடுத்து சொல்ல வேண்டும் என்று முதல்வர் விரும்புகிறார். திமுக ஆட்சியில் வளமான துறைகளை தேர்ந்தெடுத்து பணம் எடுப்பதே நோக்கமாக இருந்துள்ளது” என்றார். 

error: Content is protected !!