சென்னை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் டாரஸ் லாரி மோதி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். லாரி மோதி 50 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டதில் பைக்கை ஓட்டிச் சென்ற ஜமுனா (23) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் பயணித்த ஸ்ரீஜா லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லாரி ஓட்டுநர் சதீஷை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
லாரி மோதி இளம்பெண் பரிதாப பலி… சென்னையில் சம்பவம்
