Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஓடும் பஸ்சில் 7பவுன் நகை அபேஸ்… தஞ்சையில் பரபரப்பு

தஞ்சாவூர் அருகே உள்ள கடகடப்பை நடுத்தெருவை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மனைவி ராமஜெயம் வயது 35). சம்பவத்தன்று இவர் தஞ்சை பழைய பஸ் நிலையத்திலிருந்து கறம்பக்குடி செல்லும் பஸ்சில் ஏறினார். பஸ் சிறிது தூரம் சென்றபோது தனது கைப்பையைப் பார்த்தார். அதில் தான் கொண்டு வந்திருந்த 7 பவுன் தங்க நகைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பஸ்ஸில் உடன் இருந்தவர்களிடம் விசாரித்தார் .ஆனால் நகைகள் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
உடனடியாக பஸ்சை விட்டு கீழே இறங்கி தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் தேசியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

error: Content is protected !!