Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பத்தூரில் சாதிய பாகுபாடு புகார்- அதிகாரியைக் கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்!

திருப்பத்தூரில் சாதிய பாகுபாடு புகார்- அதிகாரியைக் கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்!

சாதிய வன்மத்தோடு செயல்படும் திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் என்பவரை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட களரூர் பகுதியில் அப்பகுதி பொதுமக்களின் பல ஆண்டுகள் கோரிக்கையான நியாயவிலை கடை கேட்டு கொண்டதினையெடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட கவுன்சிலர் இரா. சுபாஷ்சந்திரபோஸ் அவர்களின் நிதியிலிருந்து கடந்த 2025_2026ஆம் ஆண்டுக்கான 15ஆவது மாநில நிதிகுழு திட்டத்திலிருந்து ரூபாய் 7லட்சம் ஒதுக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இதனையெடுத்து இன்று அக்கட்டிடம் இன்று திறப்பு விழா செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்ததையெடுத்து

முன்னாள் மாவட்ட கவுன்சிலரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் பிரிவு மாநில செயலாளர் இரா. சுபாஷ்சந்திரபோஸ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாடப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு புதிய கட்டிடம் திறப்பு விழா குறித்து அப்பகுதி பொதுமக்களுக்களும், தனக்கும் எந்தவித அழைப்பிதழ் இல்லாமல் சாதிய வன்மத்தோடு செயல்ப்படும் திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் என்பவரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அப்போது கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் அதிகாரிகள் சமாதானம் பேச்சைவார்த்தையை தொடர்ந்து கட்டிடம் வருகிற 13ஆம் தேதி திறக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

error: Content is protected !!