Skip to content
Home » தமிழகம் » Page 407

தமிழகம்

மார்ச் 1ல் தொடங்கும்…… பிளஸ்2 தேர்வு அட்டவணை

  • by Senthil

தமிழ்நாட்டில் பிளஸ்2  அரசு பொதுத்தேர்வு தேதியையும், தேர்வு அட்டவணை மற்றும், ரிசல்ட் தேதியையும் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அறிவித்தார்.  தேர்வுகள் அனைத்தும்  காலை 10  மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு நிறைவடையும்.,… Read More »மார்ச் 1ல் தொடங்கும்…… பிளஸ்2 தேர்வு அட்டவணை

காலை உணவு திட்டம்….பெரம்பலூரில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு….

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில்மேஷ்ராம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் மாவட்ட… Read More »காலை உணவு திட்டம்….பெரம்பலூரில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு….

6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை…

நாகை, மயிலாடுதுறை உட்பட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என  சென்னை வானிலை ஆய்வு… Read More »6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை…

தொடர் மழை… உயிரிழந்த கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை…

  • by Senthil

நாகை மாவட்டத்தில் கனமழையால் வயலில் மூழ்கிய சம்பா, தாளடி பயிர்களின் பாதிப்புகள், மழை நீரால் சூழப்பட்ட சுனாமி குடியிருப்புகள் மற்றும் முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பார்வையிட்டு அவர்களின்… Read More »தொடர் மழை… உயிரிழந்த கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை…

மார்ச் 1ம் தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு தொடக்கம்….. மே 6ல் ரிசல்ட் … அமைச்சர் அறிவிப்பு

  • by Senthil

தமிழ்நாட்டில்  10,11, 12ம் வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான தேர்வு அட்டவணையை சென்னையில் இன்று காலை  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் வெளியிட்டார்.  அதன் விவரம் வருமாறு: பிளஸ்2 பொதுத்தேர்வு 2024 மார்ச்… Read More »மார்ச் 1ம் தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு தொடக்கம்….. மே 6ல் ரிசல்ட் … அமைச்சர் அறிவிப்பு

அதிமுக கொடி பயன்படுத்த தடை ……ஓபிஎஸ் வழக்கு இன்று விசாரணை

அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தத் தடைவிதிக்கக் கோரி எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சதிஷ்குமார்… Read More »அதிமுக கொடி பயன்படுத்த தடை ……ஓபிஎஸ் வழக்கு இன்று விசாரணை

உடல்நலக்குறைவு அமைச்சர் செந்தில்பாலாஜி ‘அட்மிட்’.. இன்று ஆஸ்பத்திரி செல்கிறார் முதல்வர்..?

  • by Senthil

கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டட தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்றையதினம் வாந்தி மற்றும் வயிற்று போக்கு காரணமாக நேற்று மாலை… Read More »உடல்நலக்குறைவு அமைச்சர் செந்தில்பாலாஜி ‘அட்மிட்’.. இன்று ஆஸ்பத்திரி செல்கிறார் முதல்வர்..?

இன்றைய ராசிபலன்… (16.11.2023)

வியாழக்கிழமை.. மேஷம் இன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகமாகலாம். தொழிலில் மந்த நிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். கடன்கள் சற்று குறையும். தெய்வ வழிபாடு நல்லது. ரிஷபம் இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். பேச்சில் நிதானம் நல்லது. மிதுனம் இன்று உங்களுக்கு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் பணிச்சுமை குறையும். கடகம் இன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையில் உங்கள் திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும். சிம்மம் இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவினாலும் செலவுகளும் அதிகரிக்கும். திருமண சுப முயற்சிகளில் சிறு இடையூறுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கன்னி இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். துலாம் இன்று பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்கள் ஏற்படும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் ரீதியான புதிய திட்டங்களில் வெற்றி கிட்டும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உற்றார் உறவினர்களுடன் பகை விலகி நட்பு ஏற்படும். விருச்சிகம் இன்று உங்களுக்கு நெருங்கியவர்களால் பிரச்சினைகள் வரலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை தோன்றும். விட்டு கொடுத்து நடந்து கொண்டால் மன அமைதி உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தனுசு இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். தொழில் வளர்ச்சிக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். மன அமைதி ஏற்படும் மகரம் இன்று உங்களுக்கு வர வேண்டிய பணவரவில் சில தடங்கல்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சுபகாரிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உறவினர்களால் அனுகூலப் பலன் கிட்டும். கும்பம் இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சேமிப்பு உயரும். மீனம் இன்று உங்களது பலமும் வலிமையும் கூடும். கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். வேலையில் உங்கள் திறமைக்கேற்ற பலன் கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வருமானம் பெருகும்.

மறைந்த சங்கரய்யாவுக்கு புதுகையில் செவ்வணக்க அஞ்சலி..

  • by Senthil

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் மறைந்த தோழர் சங்கரைய்யா அவர்களுக்கு செவ்வணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, முன்னாள் எம்.எல்.ஏ.கவிதைப்பித்தன்,புதுக்கோட்டை நகர தி.மு.க.செயலாளர் ஆ.செந்தில் உள்ளிட்டகம்யூனிஸ்டு இயக்கதோழர்கள்,அனைத்துக்கட்சியினர்பங்கேற்றனர்.

திருச்சி அருகே மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 2 பேர் கைது…

திருச்சி,திருவெறும்பூர் அருகே உள்ள கிளியூர் பகுதியில் உள்ள கல்லணை கால்வாய் ஆற்றில் அரசு அனுமதியில்லாமல் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்படுவதாக திருவெறும்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த பகுதியில் நேற்று… Read More »திருச்சி அருகே மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 2 பேர் கைது…

error: Content is protected !!