பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில்மேஷ்ராம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் மாவட்ட கலெக்டர் க.கற்பகம் வாலிகண்டம் புறம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அரசு அலுவலர்கள் பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.