தமிழ்நாட்டில் பிளஸ்2 அரசு பொதுத்தேர்வு தேதியையும், தேர்வு அட்டவணை மற்றும், ரிசல்ட் தேதியையும் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அறிவித்தார். தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு நிறைவடையும்.,

காலை 10 மணி முதல் 10.10 மணி வரை வினாத்தாளை மாணவர்கள் படிக்கலாம். 10.10 முதல் 10.15வரை, அதாவது 5 நிமிடங்கள் மாணவர்கள் விடைத்தாளில் தங்கள் பதிவெண் உள்ளிட்ட விவரங்களை எழுதலாம். 10.15 மணிக்கு மாணவர்கள் தேர்வு எழுத தொடங்கி மதியம் 1.15 மணிக்கு நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
அதன்படி பிளஸ்2 தேர்வு அட்டவணை விவரம் வருமாறு:
மார்ச் 1ம் தேதி– மொழித்தேர்வு(தமிழ்)
மார்ச் 5ம் தேதி — ஆங்கிலம்
மார்ச் 8ம் தேதி— ஹோம் சயின்ஸ், பொலிடிக்கல் சயின்ஸ், புள்ளியியல், , நர்சிங்( வொக்கேசனல்), பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், பயோ கெமிஸ்ட்ரி , எதிக்ஸ் அண்ட் இந்தியன் கல்ச்சர், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ்,
மார்ச் 11ம் தேதி– வேதியியல், அக்கவுண்டன்சி, புவியியல்.
மார்ச் 15ம் தேதி— இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் டெக்னாலஜி,
மார்ச் 19ம் தேதி —- கணிதம், விலங்கியல், வர்த்தகம், மைக்ரோ பயாலஜி, நர்சிங்(ஜெனரல்),
மார்ச் 22ம் தேதி—- பயாலஜி, தாவரவியல், வரலாறு, பிஸ்னஸ் மேனேஜ்மெண்ட், டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி, பேசிக் சிவில் இன்ஜினியரிங், ஆபீஸ் மேனேஜ்மெண்ட் அண்ட் செக்ரட்டரிஷிப்.