Skip to content
Home » எந்த திட்டத்தை தடுத்தோம்.. சொல்லுங்கள்…. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்

எந்த திட்டத்தை தடுத்தோம்.. சொல்லுங்கள்…. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்

  • by Senthil

பொள்ளாச்சி   ஆச்சிப்பட்டியில் நடந்த அரசு  விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: அரசு விழாவா, மண்டல மாநாடு என்று எண்ணும் அளவுக்கு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் தெம்போடு,  துணிவோடு உங்களிடம் வந்துள்ளேன்.

மக்களிடம் உள்ள மகிழ்ச்சியை காணும்போது எந்த தேர்தல் வந்தாலும் நாம் தான்  வெற்றி   பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

3 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட விரும்புகிறேன்.   காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி,  மகளிர் இலவச பஸ் திட்டம்,  மகளிர் உரிமை திட்டம், நம்மை காக்கும் 48, கள ஆய்வில் முதல்வர்,  நீங்கள் நலமா திட்டம்  என பல திட்டங்கள்  செய்துள்ளோம்.

கோட்டையில் இருந்து திட்டங்களை அறிவிக்காமல் மக்களிடம் சென்று  அந்த திட்டம் பற்றி கேட்கிறேன்.  உங்கள் கோரிக்கைகளை,  கருத்துக்களை  பிரச்னைகளை காதுகொடுத்து கேட்கிறேன் நான்.  உங்களுக்காக உழைக்கிறேன் நான். அதனால் தான் நீங்கள் நலமா திட்டத்தை தொடங்கி உள்ளேன். இப்படி சிந்தித்து சிந்தித்து திட்டங்களை செய்வதால் தான்  தமிழ்நாடு முன்னேறி உள்ளது.

இதைப்பற்றி் சிலர் பொறாமையால்   அவதூறுகள்  பரப்புகிறார்கள்.  வாட்ஸ் அப் யுனிவர்சிட்டி மூலம்  பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு நீங்கள் தக்க பாடம் புகட்டவேண்டும். அதற்கு பதில் சொல்லும் நேரம் வந்து விட்டது. அதற்கு அடையாளம் தான் நீங்கள் திரண்டு வந்திருக்கிற காட்சி. ஈரோடு மாவட்டத்திற்கு  விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம்,  கிராமப்புற சாலைகள், மருத்துவமனைக்கு மாபெரும் கட்டடம், வெள்ளோடு கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பு, மஞ்சள் ஏற்றுமதி மையம் என பல திட்டங்கள் செய்துள்ளோம்.

நீலகிரியில் தேயிலைத்தோட்ட தொழிலாளர்களுக்கு  ஊதிய உயர்வு, அரிசிக்கு பதிலாக கேழ்வரகு ரேசனில் வழங்குகிறோம்.  இப்படி கோவைக்கும், நீலகிரிக்கும், திருப்பூருக்கும், ஈரோட்டுக்கும் ஏராளமான தி்ட்டங்கள் கொண்டு வந்துள்ளோம். அத்துடன் 273 திட்டங்களை தொடங்கி வைக்கிறோம்.

பொள்ளாச்சி  தென்னை சாகுபடி அதிகம் உள்ளது.  விவசாயிகளுக்கு3 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்.  தேங்காய்  விற்பனைக்கு 157 ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம்  நடவடிக்கை  எடுக்கப்படும். நல்ல விலை கிடைக்க இதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.   மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் வாளையார் வனப்பகுதியில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டித்தரப்படும். கோவை மருத்துவ கல்லூரியில்  மழை நீர்வடிகால் வசதி செய்யப்படும்.  உக்கடம்  பஸ் நிலையம்  நவீன முறையில் சீரமைக்கப்படும்.

ஈரோடு வஉசி பூங்கா  ரூ.15 கோடியில் தரம் உயர்த்தப்படும்.  சத்தியமங்கலம் நகராட்சியில் ரூ.20 கோடியில் குடிநீர் வசதி செய்யப்படும்.  மஞ்சள்  இருப்பு வைக்க குளிர்பதன கிடங்கு ஏற்படுத்தப்படும். புதிய மாவட்ட நூலகம் ஏற்படுத்தப்படும்.

திருப்பூர் மாவட்டத்தில் 5 அறிவிப்புகளை வெளியிடுகிறேன். திருப்பூர் மாநகராட்சக்கு ரூ.75 கோடியில் புதிய அலுவலக கட்டிடம் கட்டப்படும். 13 சமுதாய நலக்கூடங்கள் அமைக்கப்படும். பல்லடம் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.

நீலகிரி மாவட்டத்தில் உதகை கால்நடை பூங்கா உலகதரத்துக்கு  உயர்த்தப்படும்.  துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும். 10 நியாயவிலை கடைகளுக்கு புதிய கட்டிடம் கட்டப்படும். 2 சமுதாய நலக்கூடங்கள் கட்டப்படும்.  நான் ஒரு கோப்பில் கையெழுத்து போடுகிறேன் என்றால் லட்சகணக்கான மக்கள் பயன் அடைகிறார்கள் என்று பொருள்.

10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் இதைப்போல பட்டியலிட முடியுமா,  அந்த அதிமுக ஆட்சி தங்கள் கோட்டை என சொல்லிக்கொண்டார்கள், அவர்கள் இந்த மேற்கு மண்டலத்துக்கு  என்ன செய்தார்கள். மகள்களை பெற்ற பெற்றோரை பதறச்செய்தனர் அதிமுக ஆட்சியில் பெண்களை மிரட்டி  பாலியல் துன்புறுத்தினர்.  திமுக மகளிர் அணியினர் தான்  போராடினார்கள். பத்திரிகையாளர்கள் மிரட்டப்பட்டனர்.

இந்த பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தேன். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை அறி்வித்த அக்கறையற்ற ஆட்சி தான் அதிமுக ஆட்சி.  ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா கொலை, கொள்ளை. ஜல்லிக்கட்டு போராட்டத்தில்  மக்கள்  தாக்கப்பட்டனர். இது யார் ஆட்சியில்: ?பெண் போலீஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு, தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  குட்கா மாமுல் பட்டியலில் அமைச்சர்,  டிஜிபி  பெயர் இருந்தது. இது யார் ஆட்சியில் நடந்தது. அந்த கூட்டணி மக்களை ஏமாற்ற பிரிந்தது போல  மக்களை ஏமாற்றுகிறார்கள்.

மக்களை ஏமாற்ற அதிமுக பாஜக கள்ளக்கூட்டணி ஒருபக்கம்நிற்கிறது. இன்னொரு பக்கம் திமுக கூட்டணி.  நமக்கு உறுதுணையில்லாத ஆட்சி மத்தியில் உள்ளது. நம்மோடு   உறுதுணையாக இருக்கும்  இந்தியா கூட்டணி ஆட்சி இருந்தால் இதை  விட பல மடங்கு செய்யமுடியும்.

மோடி அவர்களே நீங்கள் கொடுத்த உத்தரவாதம் என்ன? ரூ.15 லட்சம் என்னாச்சு, இளைஞர்களுக்கு  ஆண்டுக்கு2 கோடி வேலை வாய்ப்பு என்னாச்சு ? அதைச்சொல்லுங்கள். அடுத்தவாரம் வரும் பிரதமர், தமிழ்நாட்டுக்கு  செய்த சிறப்பு திட்டங்களை சொல்லுங்கள்,.  பிரதமர் வரும்போது நீங்கள் கேட்க வேண்டும்.  பாஜக கொண்டு வரும் திட்டத்தை திமுக தடுக்கிறது என்று பொய் சொல்கிறார்.  பொய்யும், வாட்ஸ் அப் பார்வர்டும் தான் பாஜகவின் உயிர்மூச்சு. தேர்தலுக்கு முன் வந்து பொய் சொன்னால் அதை நம்புவதற்கு நாங்கள் என்ன ஏமாளிகளா?

அண்டபுளுகு, ஆகாச புளுகு என்பார்கள். அதைப்போல இது மோடிப்புளுகு, எந்த திட்டத்தை நாம் தடுத்தோம்.  சொல்லுங்கள்.  மதுரை எய்ம்ஸ் திட்டத்தை கொண்டு வந்தீர்கள்.  அதை பட்டியிலிடுங்கள். ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது அறிவித்தீர்கள். அதன்பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் முதல்வராக இருந்தனர். அதன்பிறகு இப்போது நான் முதல்வராக இருக்கிறேன். இதில் யார் தடுத்தார்கள் எய்ம்சை.  பொய்தான் பாஜகவின் உயிர் மூச்சு. இனி பாஜகவின் பொய் எடுபடாது. பாஜக  அதிமுக கள்ளக்கூட்டணியை மக்கள் கண்டுகொண்டு விட்டார்கள். பிரிந்து விட்டது போல நடிக்கிறார்கள்.  திராவிட மாடல் அரசுக்கு நீங்கள் துணை நிற்பது போல ஒட்டுமொத்த இந்தியா மக்களும் ஒன்று திரண்டுவிட்டனர்.  பாசிசத்தை அழிக்க, இந்தியாவை காக்க அழைக்கிறேன். இந்தியாவை காப்போம்.

இவ்வாறு அவர்  பேசினார். விழாவில் அமைச்சர்கள்  கே.என்.நேரு, முத்துசாமி,  சாமிநாதன்,   கயல்விழி, மற்றும் ஆ ராசா எம்.பி.  உள்பட பலர்  பங்கேற்றனர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!