Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் தீ தடுப்பு -மீட்பு பயிற்சி முகாம்

கரூரில் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், பாதுகாவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கான தீ விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தீயணைப்பு நிலைய வளாகத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய பாதுகாவலர்கள் மற்றும் ஊழியர்கள், பொதுமக்களுக்கு பணியாற்றும்

இடத்தில் திடீரென ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு முன்கூட்டியே தவிர்ப்பது, திடீர் தீ விபத்து ஏற்பட்டால் அதனை உடனடியாக கட்டுப்படுத்துவது, பாதுகாப்பு உபகரணங்களை

சரியான முறையில் பயன்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

மேலும், தீ விபத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது தொடர்பான செயல்முறை பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. தொடர்ந்து, தீயணைப்பு நிலையத்தில் பயன்படுத்தப்படும்

தீயணைப்பு கருவிகளின் செயல்பாடு குறித்து வீரர்கள் நேரடி செயல்விளக்கம் அளித்தனர்.

பயிற்சியின் நிறைவில், கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

error: Content is protected !!