சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கண்ணன், விவாகரத்து பெற்ற பெண்களை குறிவைத்து, திருமண ஆசைக்காட்டி ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது. 15-க்கும் மேற்பட்ட பெண்கள் அவரது வலையில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதேபோல் மலேசியாவில் வசிக்கும் கோவையைச் சேர்ந்த பெண்ணிடமும் நகைகள், விலை உயர்ந்த செல்போன் மற்றும் ரூ.11 லட்சம் பெற்றதாக குற்றச்சாட்டு உள்ளது. லாட்ஜில் இருந்தபோது கண்ணனின் செல்போனை பார்த்த அந்தப் பெண்ணுக்கு உண்மை தெரியவந்தது. இதுகுறித்து புகார் அளித்த நிலையில், போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருமண ஆசை காட்டி 15 பெண்களை ஏமாற்றிய நபர் கைது
