Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை அதிகாரி மயங்கி விழுந்து சாவு…

தஞ்சாவூர், சீனிவாசபுரம் அருகே சேவப்பநாயக்கன்வாரி பகுதியை, சேர்ந்த தெய்வபாலன்54. இவர் தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராகப் (இடைநிலை) பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில், நடைபெற்ற சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில், தெய்வபாலன் கலந்துக்கொண்டனர். அப்போது, தெய்வபாலன் திடீரென மயங்கி விழுந்தார். உடனே, தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, தெய்வபாலனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் மாரடைப்பால், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார், விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!