திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் தியாசின் ( 17). டூவீலர் மெக்கானிக்கான இவர் தனது உறவு பெண்கள் அனுஷா, அகிலா, யமுனா ஆகியோரை ஒரு டூவீலரில் ஏற்றிக்கொண்டு திருச்சி ரயில்வே ஜங்ஷன் செல்ல புதிய வெங்காயம் மண்டி சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். டூவீலரை வழிமறித்த அந்த அந்த நபர் தன்னை போலீஸ்காரர் என அறிமுகம் செய்துக்கொண்டு ஆர்.சி. புக், லைசன்ஸ் ஆகியவற்றை கேட்டுள்ளார். அதன் பின்னர் ரியாசின் மற்றும் அந்தப் பெண்களின் கைகளில் இருந்த செல்போன்களையும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதை எடுத்து பாதிக்கப்பட்ட ரியாசின் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நாஞ்சில் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் செல்போன்களை பறித்து சென்ற நபர் அரியமங்கலம் திடீர் நகர் மேல அம்பிகாபுரம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த மணிவேல் (39) என்பதும், திருவரம்பூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மணிவேலை கைது செய்தனர்.
இவர் கடந்த 9ம் தேதி முதல் பணிக்கு செல்லாமல் இருந்த போலீஸ்காரர் மணிவேல் மீது ஏற்கனவே அடிதடி உள்ளிட்ட சில வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.