புதுடில்லி:’ஆப்பரேஷன் சிந்துார்’ மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான செயல்பாடுகள் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கமளிக்க சஞ்சய் ஜா மற்றும் ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான எம்.பி.,க்கள் குழு நேற்று புறப்பட்டன.
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் காஷ்மீர் விவகாரம் குறித்து உலக நாடுகளிடம் விவரிக்க, அனைத்துக் கட்சிகளை சேர்ந்த ஏழு எம்.பி.,க்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுஉள்ளது.
பா.ஜ., – எம்.பி.,க்கள் ரவிசங்கர் பிரசாத், வைஜெயந்த் பாண்டா, காங்கிரசின் சசி தரூர், ஐக்கிய ஜனதா தளத்தின் சஞ்சய் ஜா, தி.மு.க.,வின் கனிமொழி, சரத் பவாரின் தேசியவாத காங்., எம்.பி., சுப்ரியா சுலே, சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையில் ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டன.
32 நாடுகள்
ஒவ்வொரு குழுவிலும் 6 – 7 எம்.பி.,க்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு 32 நாடுகளுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பயணம் செய்ய உள்ளன.
திமுக எம்பி கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழு இன்று தனது வெளிநாடு பயணத்தை தொடங்குகிறது. பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக வெளிநாடுகளுக்கு விவரிக்கும் வகையில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி தலைமையிலான குழு வெளிநாடு செல்ல உள்ளது.
இந்நிலையில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி தலைமையில் 8 எம்பிக்கள் குழு ரஷ்யா புறப்படுகிறது. நாளை ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் அதிகாரிகளை குழு சந்திக்கிறது. ரஷ்யாவை தொடர்ந்து ஸ்பெயின், கிரீஸ், சிலோவேனியா செல்கிறது. தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா எடுத்த நடவடிக்கை குறித்து வெளிநாடுகளிடம் குழு விளக்கம் அளிக்கிறது.