Skip to content

கலைஞரின் கனவு திட்டத்தில் மேலும் 1 லட்சம் வீடுகள்..! அமைச்சர் தங்கம் தென்னரசு

2026-2027 ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டப் பேரவை இன்று (செவ்வாய்கிழமை) மீண்டும் கூடியது. காலை 9.30 மணிக்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

  • ரூ.10 கோடியில் அயலக தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்கும் பணி நடைபெறும்-தங்கம் தென்னரசு
  • இலங்கை தமிழர்களுக்கு உதவித்தொகை உட்பட பல திட்டங்களுக்கு மொத்தம் ரூ.456 கோடி செலவிடப்பட்டுள்ளது தங்கம் தென்னரசு
  • ரூ.197 கோடியிலான நிவாரண பொருட்கள் இலங்கைக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது வழங்கப்பட்டது தங்கம் தென்னரசு
  • “மகளிர் உரிமைத் திட்டம் வரும் மாதங்களிலும் தடையின்றி தொடர ரூ.3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2,000 செலுத்தப்பட்டது”
  • எதிர்கால வரும் தடைகளை நிகழ் நேரத்தில் கணித்து மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டது தங்கம் தென்னரசு
  • மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 1.31 கோடி பயனாளர்களின் வங்கிக் கணக்கில் ஒரே நாளில் ரூ.6500 கோடி நிதி விடுவிக்கப்பட்டது தங்கம் தென்னரசு
  • மகளிர் சுய உதவிக் குழுக்களில் 6.23 லட்சம் குழுக்களுக்கு ரூ.1.41 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது
  • தமிழ்நாட்டில் 19 தோழி விடுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன
  • அரசு மருத்துவமனையில் நடைபெறும் பாதுகாப்பான பிரசவங்களில் நாட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது
  • பெண்களுக்கு நெருக்கடி நேரங்களில் உதவ காவலர் செயலி
  • தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தபட்டு வருகிறது
  • மகளிர்க்கான கட்டணமில்லா பயணம் திட்டத்தின் கீழ் விடியல் பயணத்தின் மூலம் சராசரியாக 888 ரூபாய் மாதத்திற்கு பெண்கள் சேமிக்கின்றனர்.
  • கல்லூரி மாணவர்கள் தொழில்நுட்பத்திறனை வளர்க்க 10 லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 6 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • கடந்த ஐந்து ஆண்டுகளில் 38 புதிய கலை அறிவியல் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே உயர்கல்வியை பொறுத்தவரையில் தேசிய சராசரியில் 47 சதவிகிதமாக உயர்கல்வி உள்ளது. உயர்கல்வித்துறைக்கு 8505 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
  • முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் 5 ஆண்டுகளுக்கு ரூ.101 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ப்பட்டுள்ளது. விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறைக்கு 718 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • கலைஞர் கனவு இல்லத்திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் கூடுதலாக ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்
  • 11.11 சதவீதம் என்ற இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பெற்று நாட்டிலேயே 2-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. மகப்பேறு நிதி உதவி திட்டத்திற்கு ரூ. 4000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தகவல் தொழில்நுட்பத் துறையில் 25,500 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்
  • தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம் எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கப்பல் கட்டுமானம், கப்பல் இயங்கு துறைகளில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் கப்பல் கட்டும் தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்பட்டுள்ளது. தொழில்துறைக்கு 4882 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 41 புதிய தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்க ரூ. 291 கோடி ஒதுக்கீடு
  • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை – ரூ. 22,090 கோடி
  • சென்னை மாநகரின் சுற்றுக்குழாய் திட்டம் – ரூ. 3,000 கோடி
  • தொழிலாளர் நலத்துறை – ரூ. 1,996 கோடி
  • நதிக்கரை மேம்பாட்டு திட்டம் – ரூ. 374 கோடி
  • பள்ளிக் கல்வித் துறை – ரூ. 48,534 கோடி ஒதுக்கீடு
  • மாற்றுத்திறனாளிகள் நலத்துறை – ரூ. 1,471 கோடி ஒதுக்கீடு
  • அயலகத் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்கும் பணி – ரூ.10 கோடி ஒதுக்கீடு
  • உயர் கல்வித்துறை – ரூ. 8,505 கோடி
  • சிறப்பு திட்ட செயலாக்கத் துறை – ரூ.17,088 கோடி
  • ஊரக வளர்ச்சி துறை – ரூ. 28,687 கோடி
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை – ரூ. 718 கோடி
  • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை – ரூ. 28,827 கோடி
  • அனைத்து சமூக பாதுகாப்பு திட்டங்கள் – ரூ. 5,463 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
error: Content is protected !!