Skip to content

+1 மாணவன் ரயிலில் பாய்ந்து தற்கொலை- சோகம்

திருவள்ளூர் மாவட்டம், தோக்கம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி தங்கமணி. இவரது மகன் பூவரசன் (17),அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற பூவரசன், மாலை வீடு திரும்பாமல் ஆரம்பாக்கம் ரயில் நிலையத்திற்குச் சென்றார். அங்கு, அவர் மின்சார ரயில்கள் வந்து செல்லும் நடைமேடையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, சென்னை சென்ட்ரலில் இருந்து ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில் ஆரம்பாக்கம் ரயில் நிலைய நடைமேடைக்கு வந்து கொண்டிருந்தது. நடைமேடையில் நின்று கொண்டிருந்த பூவரசன், யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென தண்டவாளத்தில் குதித்து ரயில் முன் பாய்ந்தார். இதில் அவர் தலை துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார். ரயிலுக்காகக் காத்திருந்த பயணிகள் இந்த கோர சம்பவத்தைக் கண்டு அச்சத்தில் அலறினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், மாணவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, பிளஸ்-1 மாணவர் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!