Skip to content

முத்தரையருக்கு 10% இடபங்கீடு… தமிழர் தேசம் கோரிக்கை

தமிழர் தேசம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சங்கீதாஸ் மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவரும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனருமான கே.கே. செல்வகுமார் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன், பொதுச் செயலாளர் தளவாய் ராஜேஷ் , மாநில இணை பொதுச் செயலாளர் கள்ளிக்குடி எம். ராஜேந்திரன், இளைஞர் அணி துரை குணசேகரன், மாநில செயலாளர்கள் கராத்தே செந்தில், மதுரை அழகர், நத்தம் பூமிநாதன், மாநில அமைப்பு செயலாளர் செம். மகுடீஸ்வரன், மாநில பொருளாளர் புதுக்கோட்டை கணேசன், மாவட்டச் செயலாளர்கள்
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வள்ளல் மணி, வையம்பட்டி துரை, மணச்சநல்லூர் சதீஸ்வரன், லால்குடி குமார், முசிறி கோல்டு குமார், ஸ்ரீரங்கம் பனையடி , மாநில மகளிர் அணி செயலாளர் கோவை சித்ரா, மதுரை கவிதா கடலூர் மாவட்ட செயலாளர் விஜய ராயலு உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வகுப்புவாரி தொகுப்பு சம இட பங்கீட்டுடன் முத்தரையர்களுக்கு 10% இடப்பங்கீட்டை உறுதி செய்திட வேண்டும்.

முத்தரையர் இன மக்களின் உட்பிரிவுகளான வலைய அம்பலக்காரர் சாதியினருக்கு 18 மாவட்டங்களில் தவறுதலாகவும் போலியாகவும் வழங்கப்பட்டுள்ள எம் பி சி சாதி சான்றிதழ்களை திரும்ப பெற்றுக் கொண்டு டிஎன்சி மற்றும் டிஎன்டி சாதி சான்றிதழ்களை வழங்கிட வேண்டும்,வலையர் புனரமைப்பு வாரியத்தை திருத்தி உடனடியாக அதனை முத்தரையர் மறுவாழ்வு திட்டமாக மேம்படுத்திட வேண்டும்,உயர் நீதிமன்றங்களில் தமிழ் மொழியை கூடுதல் வழக்காடு மொழியாக அமைத்திட வேண்டும்,2026 சட்டமன்ற தேர்தலுக்கு சரியான வியூகம் அணித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தமிழர் தேசம் கட்சியினை இடம்பெறச் செய்த தலைவருக்கு இச்செயர் குழு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்வது,பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு தலைநகர் சென்னையில் சிலை அமைத்திட வேண்டும்,திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவித்திட வேண்டும்,தமிழகத்தில் தங்கி உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கிட வேண்டும்,தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலை தடுக்க கச்சத்தீவை ஏற்றிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

error: Content is protected !!