ஆனைமலை புலிகள் காப்பக பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம் தம்மாபதியில் கடந்த வருடம் 30 என மூன்றாவது பிரித்து 90 ஹெக்டர் சீமை கருவேல மரம் ஏலம் நடைபெற்றது இதில் 20-க்கும் மேற்பட்ட மர வியாபாரிகள் கலந்து கொண்டனர் இந்த வருடம் ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவின் பெயரில் ஆனைமலை புலிகள் காப்பகம் துணை கள இயக்குனர் தேவேந்திர மீனா அறிவுறுத்தல் படி பொள்ளாச்சி வனச்சரகர் ஞானபால முருகன் தலைமையில் ஆனைமலை புலிகள் காப்பகம் தலைமை அலுவலகத்தில் ஏலம் நடைபெற்றது ஏலத்தில் மர வியாபாரிகள் 34 பேர் கலந்து கொண்டனர் இந்த வருடம் 10 ஹெட்டர் சீமை கருவேல மரம் போத்தமடை பீட் பகுதியில் இருப்பதை ஏலம் விடப்பட்டது கடந்த வருடத்தை விட இந்த வருடம் 22 .43 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளது சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு அந்த இடத்தில் ஒரு லட்சம் விதை பந்துகள் தூவ உள்ளதாக பொள்ளாச்சி வனச்சகர் தெரிவித்தார் கடந்த வருடம் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்ட இடத்தில் 14 லட்சம் விதைப்பந்துகள் தூவ பட்டத்து என குறிப்பிடத்தக்கது.
