பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் புதிய வரலாறு படைத்துள்ளார். அதாவது. இன்ஸ்டாகிராம் தளத்தில் 100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பவர்களை கடந்த முதல் அரசியல்வாதி என்ற சாதனையை பதிவு செய்துள்ளார். பிரதமர் மோடி, 2014ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் இணைந்தார். அன்று முதல் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் செயலில் இருந்து வருகிறார்.
உலக நாடுகளின் தலைவர்களில் இவருக்கே அதிகமான (இன்ஸ்டாகிராம்) பின்தொடர்பவர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 43.2 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் 2வது இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ 15 மில்லியன், பிரேசில் அதிபர் லூலாடா சில்வா 14.4 மில்லியன், துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகன் 11.6 மில்லியன் மற்றும் அர்ஜென்டினா அதிபர் ஜாவியர் மிலேய் 6.4 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த 5 முன்னணி உலக தலைவர்களின் மொத்த பின்தொடர்பவர்களைச் சேர்த்தாலும், அது பிரதமர் மோடியின் எண்ணிக்கையை விட குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

