Skip to content

வைத்தி., ஆதாரவாளர்கள் 10 ஆயிரம் பேர் இன்று திமுகவில் இணைகின்றனர்

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தலைமையில் 10 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடக்கிறது.

சுமார் 5 ஏக்கரில் இதற்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி விறு விறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தலைமையில் பத்தாயிரம் பேர் திமுகவில் இணைகின்றனர். .அதிமுகவில் உள்ள மற்ற அதிர்ச்சியாளர்களையும் திமுகவில் இணைக்கும் பணியில் வைத்திலிங்கம் மும்முரமாக இறங்கி உள்ளாராம். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் யூனியன் சேர்மன் ஆழி கோவிந்தராஜ் வைத்திலிங்கத்தை சந்தித்துள்ளார். இவர் வைத்திலிங்கம் தலைமையில் தன்னை திமுகவில் இணைத்து கொள்ள சம்மதம் தெரிவித்து விட்டாராம்.

முதலில் மகளிர் அணி மாநாட்டில் ஒரு பகுதியில் மேடை அமைத்து இணைப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

திமுகவில் இணையும் நிகழ்ச்சியை தனக்கான தனித்துவமாக காட்ட வேறு இடத்தில் தனியாக மேடை அமைத்து இணைப்பை நடத்த நினைத்துள்ளார் வைத்திலிங்கம். இதுகுறித்து செந்தில் பாலாஜியிடம் சொல்ல அவர் முதல்வர் மூலமாக உடனே சம்மதம் வாங்கி கொடுத்து விட்டாராம். இதையடுத்து இணைப்பு விழாவிற்கான பணிகள் வேகமெடுத்தன. விழா நடைபெறும் இடத்தில் பிரம்மாண்ட மேடையும், 10 ஆயிரம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. வழக்கத்தை விட வைத்திலிங்கம் தற்போது உற்சாகமாக இருக்கிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள் .

திமுகவிற்கு வைத்தியலிங்கம் வருவது ஒரத்தநாடு தொகுதியை சேர்ந்த பலருக்கும் பீதியை கிளப்பி உள்ளதாம். சட்டமன்ற தேர்தலில் சீட்டு கேட்டு காய் நகர்த்தி வந்தவர்கள் வைத்திலிங்கம் வருகையால் அதிருப்தியில் உள்ளனர். இப்போதே வைத்திலிங்கத்திற்குத்தான் சீட் உண்டு என சொல்லப்படுவதே இதற்கு காரணம். இந்நிலையில் ஒரத்தநாட்டைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் எம்.இராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பலரிடமும் அமைச்சர் கே.என்.நேரு அனைவரும் வைத்தியலிங்கத்திற்கு முழு ஒத்துழைப்போடு கொடுக்க வேண்டும் என உத்தரவே போட்டுள்ளாராம்.

error: Content is protected !!