தமிழ்நாட்டில் இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இந்த முடிவுகளை வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு:
தேர்வெழுதிய மாணவர்கள் 4, 36, 120,
தேர்வெழுதிய மாணவிகள் 4,35,119
மாணவ, மாணவிகளின் மொத்த எண்ணிக்கை 8,71,239பேர்
தேர்ச்சி பெற்றவர்கள் 8,71,261பேர். இவர்களில் மாணவிகள் 4,17,183 பேரும், (95.88%) 4,00,076 மாணவர்களும் தேர்ச்சி(91.74%) பெற்றுள்ளனர்., மாணவர்களை விட மாணவிகள் 4.14% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 15,652 பேர் தேர்வுக்கு வராமல் ஆப்சென்ட் ஆகி உள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 2.25 % பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
12,485 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த தேர்வினை எழுதினர். இதில் உயர்நிலைப்பள்ளிகள் 4930, மேல்நிலைப்பள்ளிகள் 7555,
100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் எண்ணிக்கை1867, மொத்தமாக 100 % தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 4917.
10ம் வகுப்பு ரிசல்ட், அந்தந்த பள்ளிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பிற்பகல் 2 மணிக்கு ஆன் லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
