கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கள்ளப்பள்ளியில் திருச்சி -கரூர் தேசிய நெடுஞ்சாலை அருகே கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி அரசு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 75 கல்லூரி மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இவர்கள் குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள கலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி, திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி
ஆகியவற்றிற்கு பேருந்தில் சென்று பயின்று வருகின்றனர். இன்று அதிகாலை விடுதியில் தங்கி உள்ள மாணவர்களின் 11 பேர் வைத்திருந்த VIVO, OPPO, REALME, உள்ளிட்ட செல்போன்களை மர்ம நபர்கள் விடுதிக்குள் புகுந்து திருடி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் லாலாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
