கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த சீரங்க கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது தோட்டத்தில் பட்டியில் வைத்து வளர்த்து வந்த 30 ஆடுகளில், நேற்று இரவு வெறிநாய் தாக்குதலில் 11 ஆடுகள் உயிரிழந்தன.
வழக்கம்போல் இன்று காலை தோட்டத்திற்கு வந்த பெரியசாமி, ஆடுகளுக்கு தண்ணீர் வைக்க சென்றபோது, 11 ஆடுகள் உயிரிழந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து கால்நடை துறையினருக்கு தகவல்

அளித்துள்ளார். இச்சம்பவம் காரணமாக அப்பகுதி விவசாயிகள் வேதனையிலும், ஆடு–மாடு வளர்ப்போர் பெரும் அச்சத்திலும் உள்ளனர்.
அப்பகுதியில், வெறிநாய் தொல்லையால் ஆடுகள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருவதால், வெறிநாய் தாக்குதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

