நாட்றம்பள்ளி அருகே கோழி பண்ணையில் புகுந்து கோழி விழுங்கிய 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக பிடித்து காப்பு காட்டில் விட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல் நத்தம் கிராமம் அர்ஜுனன் வட்டத்தில் வசித்து வருபவர் அருணாச்சலம். இவர் விவசாயதுடன் பண்ணை வைத்து கோழிகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் இன்று கோழி பண்ணையில் புகுந்த மலை பாம்பு அங்கே இருந்த கோழியை விழுங்கியுள்ளது. அப்போது பாம்பை பார்த்த கோழிகள் அதிக அளவு சத்தம் போட்டதை கேட்டு அருணாச்சலம் கோழி பண்ணைக்கு சென்று பார்த்த போது
சுமார் 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பேரில் நாட்றம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) கோ.சங்கர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று கோழி விழுங்கிய சுமார் 12 அடி நீள மலைப்பாம்பை பத்திரமாக பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.