சிவகங்கை மாவட்டம் காரைக்குடிமருதுபாண்டியர் நகரை சேர்ந்தவர் பாண்டிகுமார், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி.இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முதலீட்டின் பேரில் எதிர்கால தேவைக்கு மகேஸ்வரி இடங்களை வாங்கி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை தனது சொகுசு காரில் திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆவுடபொய்கை அருகே உள்ள சாய்பாபா காலனி பகுதியில் மனையிடம் பார்பதற்காக சென்ற வரை தைலமர காட்டுப்பகுதியில் அவரது காரிலேயே வைத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் மகேஸ்வரி உடல் கிடந்துள்ளது. காலையில் சென்ற மகள் நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை என மகேஸ்வரியின் தந்தை மற்றும் உறவினர்கள் தேடிச் சென்றுள்ளனர். மகள் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி குன்றக்குடி காவல்துறையினர் உடல்கூறு ஆய்வுக்கு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வந்தனர்.
சம்பவ இடத்தில் தேவகோட்டை டிஎஸ்பி பொறுப்பு கௌதம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.கொலை நடந்த இடத்தில் சிவகங்கையில் இருந்து கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு.தடயங்களை சேகரித்தனர்.மோப்பநாய் முகுளி சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. டி.எஸ்.பி கௌதம் தலைமையிலான தனிப்படை போலீசார் ரியஸ் எஸ்டேட் பிரச்சினை,கொடுக்கல் வாங்கல் தகராறு உள்பட பல்வேறு காரணங்களால் கொலை நடந்ததா என விசாரணை செய்ததில் காரைக்குடி லெட்சுமி நகரை சேர்ந்த சசி என்ற சசிக்குமாரை விசாரணை செய்ததில் கொலை செய்ததை சசிக்குமார் ஒப்புக்கொண்டுள்ளான்.
சசிக்குமார் திருமணம் ஆகாதவன்.ஆக்டிங் டிரைவரான அவன் கொலை செய்யப்பட்ட மகேஸ்வரிக்கு ஆக்டிங் டிரைவராக அவ்வப்போது சென்று வந்ததுடன் காரை ஓட்டி பழக கற்றுக் கொடுத்துள்ளான்.அந்த பழக்கத்தில் மகேஸ்வரியிடம் பணம் கடனாகப் பெற்றுள்ளார்.பணத்தை மகேஸ்வரி திருப்பிக் கேட்டு தராததால் தன் கணவரிடம் கூறி விடுவேன் என மகேஸ்வரி மிரட்டியதால் செய்வதறியாது திகைத்த சசிக்குமார், ஆவுடைபொய்கை பகுதியில் நண்பரின் இடம் உள்ளது வாங்கி விற்றால் லாபம் கிடைக்கும் எனக் கூறி நேற்று மகேஸ்வரியை ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று கல்லால் தாக்கி கொலை செய்து மகேஸ்வரியின் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளான்.சசிக்குமாரை கைது செய்த போலீசார் அவன் திருடிச் சென்ற சுமார் 13 பவுன் நகைகளை சசிக்குமாரின் வீட்டில் கைப்பற்றி உள்ளனர்.அக்கம் பக்கத்தினர் கூறுகையில்,சசிக்குமார் வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களின் வீடுகளுக்கு ஆக்டிங் டிரைவராக செல்லும்போது பெண்களுடன் பழகுவதும் அவர்களிடம் பணம் வாங்கி செலவு செய்து ஜாலியாக சுற்றி வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

