தமிழகத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை தாக்கி, அவர்களின் உடமைகள் மற்றும் படகுகளை பறிப்பதை இலங்கை ராணுவம் வழக்கமாக கொண்டு உள்ளது. வருடக்கணக்கில் நடக்கும் இந்த அட்டூழியத்தை மத்திய அரசும் கண்டிப்பதில்லை என்பதால், இலங்கை தொடர்ந்து இதே அட்டூழியத்தை செய்து வருகிறது. நேற்றுஇரவு ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு சென்ற 5 மீன்வர்களை இலங்கை ராணுவம் கைது செய்ததுடன் அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தது.
இன்று அதிகாலை பாம்பன் பகுதியை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை ராணுவம் அங்கு வந்து 9 மீனவர்களை கைது செய்துஅவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தது. ஒரே நாளில் 14 மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.