Skip to content

ஆம்னி பஸ் தீப்பிடித்து 15 பேர் பலி… ஆந்திராவில் பரிதாபம்

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே பைக் மீது மோதியதில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 15 பேர் உயிரிழப்பு என கர்னூல் கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற பேருந்தில் சுமார் 40 பேர் பயணம் செய்தனர். பேருந்துக்கு அடியே பைக் சென்றதில் தீப்பிடித்ததாக முதற்கட்ட தகவல் வௌியாகியுள்ளது. பலரும் அவசரகால கதவு வழியே குதித்து உயிர் தப்பியுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 18 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!