சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தீவிரமாக தயாராகி வருகிறது. இதையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார். இந்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் என 4 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
இதனைதொடர்ந்து அதிமுக பொதுக்குழுகூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..
கனமழை பாதிப்பு. தமிழக அரசை கண்டித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்.
கோவை, மதுரை மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.
2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்குவோம்.
கூட்டணி குறித்து முடிவெடுக்க ஈபிஎஸ்க்கு முழு அதிகாரம் உள்ளது.
அதிமுக பாஜக கூட்டணிக்கு அதிமுக பொதுக்குழுவில் ஒப்புதல்.
SIR மூலம் தகுதியான வாக்காளர் பட்டியலை வௌியிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

