Skip to content

16 வயது மாணவி மரணம்- பிரேத பரிசோதனையில் 4 மாத கர்ப்பம்

செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் தமிழ்ப்ரியா (16). இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரில் செயல்பட்டு வரும் ஒரு கிருஸ்தவ பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். மாணவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மாணவிக்கு மஞ்சள்காமாலை நோய் தொற்று இருந்ததாலும் மாணவிக்கு உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததாலும் செங்கல்பட்டு அரசு மருத்துவர்களால் மாணவியை சென்னை அரசு மருத்துவ மனைக்கு மேல்சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டது.

சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதனை தொடர்ந்து மாணவியின் உடலை உடற்கூறு ஆய்வு செய்த போது மாணவி தமிழ்ப்ரியா 4 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்ததும் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததும் இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் மாணவியின் பெற்றோருக்கும் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இத்தகவலின் அடிப்படையில் சென்னை அரசு மருத்துவமனைக்கு சென்ற போலீசார், மாணவியின் பெற்றோரிடமிருந்து புகாரை பெற்று விசாரணை செய்து வருகின்றனர். இதற்கிடையில் மாணவியின் பெற்றோரின் தகவலின் அடிப்படையில் மேலமையூர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மாணவி மற்றும் கைது செய்யப்பட்டுள்ள வாலிபர் இருவருடைய விந்தணுக்களை டி.என்.ஐ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாகவும் டி.என்.ஐ ரிப்போர்ட் வந்த பிறகுதான் கைது செய்யப்பட்ட வாலிபர் குற்றவாளியா என்பது தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

error: Content is protected !!