Skip to content

ரூ.5000க்கு ஆடை வாங்கினால் 18% ஜிஎஸ்டி…சமூக வலைதளங்களில் பரவும் செய்தி உண்மையா?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஜிஎஸ்டியில் மாற்றம் செய்து அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் 2,500 ரூபாய்க்குள் ஆடைகள் வாங்கினால் 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் எனவும், 5,000 ரூபாய்க்கு மேல் ஆடை வாங்கினால் 18 சதவீத ஜிஎஸ்டி விக்கப்படும் என சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் அப்படியெல்லாம் இல்லை. இது தேவையில்லாத வதந்தி என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

இந்தநிலையில், தீபாவளிக்கு ஆடைகள் வாங்கும் போது பில் தொகையை பிரித்துப் போட்டு வாங்கினால் விலை குறையும் எனப் பரவும் செய்திகள் தவறானவை என்று கூறப்பட்டுள்ளது. “தற்போது புதிய ஆடைகள் வாங்கும்போது பில் கட்டணம் ரு2,500 வரை இருந்தால், 5 சதவீதம் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்தவேண்டும். பில் கட்டணம் ரூ.2,500-ஐ விட அதிகமாக இருந்தால் 18 சதவீதம் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்தவேண்டும். ஆகவே 5000 ரூபாய்க்கு ஆடைகள் வாங்கினால் பில் தொகையை பிரித்துப் போட்டு வாங்கவும்” என்று கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை.

ஜிஎஸ்டி ஒவ்வொரு துணிக்கும் தனித்தனியாக (per-piece basis) விதிக்கப்படும், மொத்த பில் அடிப்படையில் அல்ல. அதன்படி சமீபத்திய ஜிஎஸ்டி வரி குறைப்பு எதிரொலியாக, ரூ2,500 வரை விலை கொண்ட ஒவ்வொரு ஆடைக்கும், 5 சதவீதம் ஜிஎஸ்டிக்கும், ரூ.2,500-ஐ விட அதிக விலை கொண்ட ஒவ்வொரு ஆடைக்கும், 18 சதவீதக்கும் ஜிஎஸ்டிக்கும் விதிக்கப்படுகிறது.

உதாரணமாக, நீங்கள் ரூ.2,000 மதிப்புள்ள ஒரு சட்டை வாங்கினால் அது 5 சதவீதம் ஜிஎஸ்டிக்கு உட்படும். அதே நேரத்தில், ரூ.3,000 மதிப்புள்ள ஒரு புடவையும் அதனுடன் சேர்த்து வாங்கினால், புடவைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டிக்கும் விதிக்கப்படும். எனவே ஒரே பில்லில், இரண்டு பொருட்களுக்கும் தனித்தனியாகவே ஜிஎஸ்டி கணக்கிடப்படும். எனவே பில் தொகையை பிரித்துப் போட்டு வாங்கினால் விலை குறையும் எனப் பரவும் செய்திகள் தவறானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பொய்யான செய்தி ஆகும். எப்பொழுதுமே ஜிஎஸ்டியை பொறுத்தவரை மொத்த பில்லின் அடிப்படையில் ஜிஎஸ்டி வரி போடப்படுவது கிடையாது.

 

error: Content is protected !!