திருச்சி மாநகரம் உறையூர் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு போலீசார் நேற்று (ஜனவரி 29) தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, உறையூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்ட நாட்களாக பொது இடங்களில் கேட்பாரற்று நின்றிருந்த 18 இருசக்கர வாகனங்களை போலீசார் கண்டறிந்தனர்.
அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் குறித்து அப்பகுதியில் விசாரணை நடத்தியும் உரிய தகவல்கள் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, அந்த 18 இருசக்கர வாகனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்த உறையூர் போலீசார், அவற்றை மீட்டுப் பறிமுதல் செய்தனர்.

