திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் உபரி நீர் அமராவதி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும் திண்டுக்கல், திருப்பூர், கரூர் மாவட்டத்தில் பெய்யும் மழையின் காரணமாக அமராவதி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. கரூர் மாநகராட்சியை ஒட்டிய ஆண்டாங்கோவில்

தடுப்பணைக்கு நேற்று 446 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 6.30 மணி நிலவரப்படி விநாடிக்கு 1,821 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
அந்த தண்ணீர் முழுவதுமாக அமராவதி ஆற்றில் சென்று திருமுக்கூடலூர் எனும் இடத்தில் காவிரி ஆற்றுடன் கலந்து செல்கிறது. கரூர் பெரிய ஆண்டாங் கோவில் அமராவதி தடுப்பணை முன்பு காடு போல வளர்ந்து உள்ள கோரை புட்களை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

