அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (45). கார் டிரைவரான இவருக்கும் அரியமங்கலம் காமராஜ் நகர் முத்துராமலிங்க தேவர் தெருவை சேர்ந்த யுவராஜ் (25), அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்த பழனி தீபக் ( 21) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 23ந்தேதி (நேற்று) மதியம் கார்த்திகேயன் அரியமங்கலம் காமராஜ் நகரில் உள்ள ஓட்டலில் சாப்பிட்ட வந்துள்ளார். அப்போது அங்கு வந்த யுவராஜ் மற்றும் பழனி தீபக் இருவரும் கார்த்திகேயனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். பின்னர் அவரை கீழே தள்ளி கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதுகுறித்து கார்த்திகேயன் அரியமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து யுவராஜ், பழனி தீபக்கை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

