தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கோவில்பட்டி சரமாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் (28). இவர் நேற்று முன்தினம் பள்ளிவாசல் தெருவில் உள்ள பெட்டிக்கடை வியாபாரியிடம் 500 ரூபாய் போலி நோட்டை கொடுத்து சில்லரை கேட்டார். அவர் வைத்திருந்த ரூபாய் நோட்டுகள் குழந்தைகள் விளையாடுவதற்காக கடைகளில் விற்கப்படும் போலி ரூபாய் நோட்டுகள் என்பது தெரியவந்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சரவணனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சரவணன் மாஸ்டராக பணிபுரியும் ஓட்டலில் சோதனை நடத்தினர். சோதனையில் கட்டுக்கட்டாக 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போலியான 500 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து, அசாம் மாநிலத்தை சேர்ந்த குமார் சர்மா(45) மற்றும் சரவணன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
500 ரூபாய் போலி நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 2 பேர் கைது
- by Authour

