திருச்சி செசன்ஸ் கோர்ட் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், போலீசார் அப்பகுதிகளில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலைப் பகுதியில் புகையிலை விற்றுக் கொண்டிருந்த பிராட்டியூர் மிஷன் கோவில் தெருவைச் சேர்ந்த சச்சின் மார்க்கோனி (எ) அஜய் (27) மற்றும் காவிரிநகர் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த ஹர்பத்கான் (24) ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தடை செய்யப்பட்ட புகையிலையை விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, செசன்ஸ் கோர்ட் போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 200 கிராம் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் ஜாமினில் விடுவித்தனர்.

