அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சாகர் பஜார் பகுதியில், சாலையில் சென்று கொண்டிருந்த காரில் இருந்து 2 பேர் கதவை திறந்து சிறுநீர் கழித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கிடையில், போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி ஜஜ்ஜார் மாவட்டம் தாதன்பூர் கிராமத்தை சேர்ந்த மோகித்(25) மற்றும் சிலானா கிராமத்தை சேர்ந்த அனுஜ்(25) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், வீடியோவில் இடம்பெற்ற காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

