Skip to content

ஒரு நாள் 2 மாவட்டம்.., விஜய் பிரச்சாரத்தில் மாற்றம்..

 வருகின்ற செப்.20-ல் மயிலாடுதுறையில் நடக்கவிருந்த பிரசாரத்தை ரத்து செய்ய விஜய் திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தீவிர பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளது.

அதன்படி, செப்டம்பர் 13 முதல் டிசம்பர் 20 வரை சனிக்கிழமைகளில் மட்டும் தமிழகம் முழுவதும் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வரும் செப் 20 அன்று நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் நடைபெறவிருந்தது.

தற்பொழுது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு அரசியல் பயணம் ஒரு நாள் இரண்டு மாவட்டங்கள் என மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, வெளியிடப்பட்ட திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, முன்னதாக வெளியிட்ட பயண திட்டத்தில் ஒரே நாளில் அதிகப்பட்சம் மூன்று மாவட்டங்களுக்கு விஜய் செல்வதாக முடிவு செய்யப்பட்டது.

ஆம், ரசிகர்களின் கூட்டம் அலைமோதியதால் கடந்த சனிக்கிழமையன்று நடக்கவிருந்த பெரம்பலூர் பிரசாரத்தை ரத்து செய்திருந்தார் விஜய். அதேபோல, வரும் சனிக்கிழமையன்று நடக்கவிருக்கும் மயிலாடுதுறை பிரசாரத்தை ஒத்திவைத்துவிட்டு, நாகை, திருவாரூரை மட்டும் கவர் செயய விஜய் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!