Skip to content

சுவாமிமலை முருகன் கோவிலில் 2 புதிய லிப்ட்…

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை முருகன் கோவிலில் 3.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட மின் தூக்கியை இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் சேகர்பாபு திறந்து வைக்க வந்த நிலையில் லிஃப்ட் வேலை செய்யாததால் அமைச்சர்கள் கோபமடைந்தனர்.
கும்பகோணம் அருகே முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில் ரூ.3.55 கோடியில் புதிதாக இரண்டு மின்தூக்கி அமைக்கப்பட்டுள்ளன. இதனை பக்தர்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் சேகர்பாபு இன்று திறந்து வைத்தார்.

அப்போது, லிஃப்டில் ஏறி மேலை உள்ள கோவிலுக்கு செல்வதற்காக சென்றபோது லிஃப்ட் வேலை செய்யாததால் அமைச்சர் சேகர் பாபு முகம் மாறியது. இதை கவனித்த அமைச்சர்

கோவி. செழியன் அருகில் இருந்து மற்றொரு லிஃப்டுக்கு அழைத்து சென்றபோது அந்த லிஃப்ட்டிலு

ம் மின்சாரம் திடீரென நின்றதால் ஆத்திரமடைந்த அமைச்சர் கோவி. செழியன் லிஃப்ட் ஆப்ரேட்டரை கடிந்து கொண்டார். பின்னர் நீண்ட நேரம் கழித்து ஒரு லிஃப்ட் மட்டும் வேலை செய்தது. அதில் அமைச்சர்கள் சேகர்பாபு, கோவி.செழியன், பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஜவாஹிருல்லா, கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் ஆகியோர் அதில் ஏறி மேலே வந்தனர்.

error: Content is protected !!