மேற்கு வங்காளத்தை சேர்ந்த சனுமாஜி (வயது26)உஜ்ஜல்பெளவுமிக் (25)அமித்ராய் ஆகிய 3பேரும் கோவை காந்தி பார்க் ,சலீவன் வீதியில் தங்கநகை பட்டறையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் தங்க நகை பட்டறை விடுமுறை காரணமாக என்பதால் பொள்ளாச்சி சுற்றுலா செல்வதற்காக கடைக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தி

ல் சனுமாஜிஉஜ்ஜல்பெளவுமிக், அமித்ராய்ஆகிய 3பேரும் ஒரு இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி மற்றும் பிந பகுதிகள் சுற்றி பார்க்க கிளம்பினார்கள். இருசக்கர வாகனம் பொள்ளாச்சி அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியில் கோவை& பொள்ளாச்சி நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தது. இதில் சனுமாஜி ஓட்டி வந்த இருசக்கர வாகனம் அதிவேகமாக சென்றது. அப்போது திடீரென இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கட்டுபாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த இரும்பு கம்பின் மீது மோதி அங்கிருந்து புதருக்குள் பாய்ந்தது.
இந்த விபத்தில் அமித்ராய் உஜ்ஜல்பெளவுமிக் 2பேரும் சம்பவ இடத்தில் பலியானார்கள் இதில் பலத்தை காயம் அடைந்த சனுமாஜி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் . இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைசெய்து வருகின்றனர்.
சுற்றுலா சென்ற இடத்தில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி இரும்பு கம்பி மீது மோதிய விபத்தில் வட மாநில தொழிலாளர்கள் 2பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

