கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை…
திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கணேசன் (45) இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார்
மது பழக்கத்திற்கு அடிமையான கணேசன் கடந்த 17ம் தேதி உணவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்று விட்டார். மறுநாள் காலை வீட்டில் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது கணேசன் படிக்கட்டு இரும்பு கட்டையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கட்டிடதொழிலாளி 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து சாவு
ஸ்ரீரங்கம் , வசந்தம் நகரை சேர்ந்தவர் பாலாஜி (29. )இவர் கட்டிட வேலை செய்யும் தொழிலாளி கடந்த 16 ந் தேதி சஞ்சீவி நகர் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் இரண்டாவது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது துரதிஷ்டமாக பாலாஜி கீழே விழுந்து தலையில் பலத்த காயமாக ஏற்பட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பாலாஜி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எடமலைப்பட்டி புதூரில் கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
திருச்சி ராம்ஜி நகர் மாரியம்மன் கோவில் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதையடுத்து எஸ்ஐ கீதா தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது கஞ்சா விற்றுக் கொண்டிருந்த புங்கனூர் காந்தி நகர சேர்ந்த மோகன் என்பவரின் மனைவி நிரஞ்சனா தேவி (57) வாசுதேவன் (வயது 46) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர. அவர்களிடமிருந்து 700 கிராம் கஞ்சா மற்றும் ரூ 1,1800 பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
வாலிபரிடம் பணம், நகை பறித்த 3 பேர் கைது
திருச்சி ஏர்போர்ட் ராஜாநகர் ராயல் பார்க் பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா (26). இவர் திருச்சி, சென்னை பைபாஸ் சர்வீஸ் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக பணிபுரிகிறார். பிப். 16 ம் தேதி இளையராஜா அரியமங்கலம் பாலத்திற்கு கீழே நடந்து சென்றார். அப்போது, அரியமங்கலம் பகுதியை சேர்ந்த அஜய் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் அரியமங்கலம் பாவலர் நகர் முட்புதர் அருகே அழைத்துச் சென்று அவரிடம் இருந்த ரூ. பத்தாயிரம் பணம் மற்றும் ஒன்றரை பவுன் தங்க நகைகளை பறித்து சென்றார்.இது குறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து அரியமங்கலம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவுடி அஜய் (26 )மற்றும் தெற்கு உக்கடை பகுதியை சேர்ந்த அசார் முகமது (26). அரியமங்கலம் சீனிவாச நகரை சேர்ந்த சண்முகபிரியன் (22) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீரங்கத்தில் ரயிலில் அடிபட்டு முதியவர் பலி
..
ஸ்ரீரங்கம், ரயில் நிலையத்திற்கும் பொன்மலை ரெயில் நிலையத்திற்கும் இடையே திருவரங்கம் ரெயில் நிலையத்திற்கு அருகே 60 வயது மதிக்கத்தக்க ஆண் முதியவர் இன்று தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியே வந்த ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்துள்ளார். இவர் காவி நிறத்தில் வேஷ்டியும், வெள்ளை மற்றும் ரோஸ் கலரில் கட்டம் போட்ட துண்டும், மற்றும் வெள்ளை ஊதா கலரில் கட்டம் போட்ட ரெடிமேட் சட்டையும் அணிந்துள்ளார். உடலை கைப்பற்றி திருச்சி அரசு பொது மருத்துவமனை சவக்கிடங்கிற்க்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருச்சி இருப்புப்பாதை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

