Skip to content

பூதலூர் அருகே 2 வாலிபர்கள் விபத்தில் பலி..

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த திரிஷேக், வயது (17) மற்றும் உதாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த மற்றொரு இளைஞர் சந்தோஷ், வயது (17) ஆகிய இரண்டு இளைஞர்களும் இருசக்கர வாகனத்தில் திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து ஊருக்கு திரும்பி வரும் போது

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதாகோவில் சாலை ஓரமாக உள்ள வீட்டின் காம்பவுண்டு சுவரில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி மோதியது
இதில் இரண்டு இளைஞர்களுக்கு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருக்காட்டுப்பள்ளி போலீசார் உடலை மீட்டு பூதலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!