Skip to content

20 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து

தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில்  ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில்  அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்ப்பலி ஏற்படுகிறது.  பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட விபத்துக்களை  ஆய்வு செய்த அரசு அதிகாரிகள், இது குறித்து  அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் விபத்து நடந்த ஆலைகளில்  பாதுகாப்பு நடவடிக்கைகளில் குளறுபடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து  அரசின் விதிமுறைகளை பின்பற்றாத 20 பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொழிலக பாதுகாப்பு துறை பயிற்சியில் பங்கேற்காத பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் ரத்து.

பட்டாசு ஆலைகளில் வெடி விபத்தை தடுக்க விருதுநகர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

பட்டாசு ஆலை ஃபோர்மேன்கள், உரிமையாளர்களுக்கு தொழிலக பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது

error: Content is protected !!