தமிழகத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்திற்காகவும், கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக சிறந்து விளங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வந்தது. பின்னர் கொரோனா காலத்தில் இது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், 2025-26 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் சிறிய மாற்றங்களுடன் இலவச லேப்டாப் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் லேப்டாப்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. 8 ஜிபி RAM, 256 GB SSD கொண்ட Hard Disk, 14 அல்லது 15.6 அங்குல திரையுடன் மடிக்கணினி கொள்முதல் செய்யப்படுகிறது.
