தமிழகத்தில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தலுக்கு பின்பு
நடைபெற உள்ள சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியலை இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சரவணன் திருச்சி மாவட்ட 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதன் படி
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் எஸ்ஜ ஆர் முன்பு வாக்காளர்களின் எண்ணிக்கை
ஆண்கள் – 99,0215 பேர்,
பெண்கள் – 10,46,664 பேர்
பிற இனத்தவர்கள் – 301
மொத்தம் – 20 லட்சத்து,37 ஆயிரத்து 180.
எஸ் ஜ ஆர்
சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு பிறகு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் அடிப்படையில்
ஆண்கள் – 10,31,354 பேர்
பெண்கள் – 10,94,642 பேர்
பிற பாலினத்தவர்கள் – 307
மொத்தம் -21,26,303 ஆகும்.
வரைவு வாக்காளர் பட்டியலுக்கு பிறகு பெறப்பட்ட மொத்த படிவம் 6 எண்ணிக்கை :
ஆண்கள் – 48,037 பேர்
பெண்கள் – 56,633 பேர்
இதர – 13 பேர்
மொத்தம் – 1,04,683 பேர் ஆவார்கள்.
இதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த படிவம் 6- களின் எண்ணிக்கை :
ஆண்கள் – 47,451 பேர்
பெண்கள்- 56,026 பேர்
இதர – 12 பேர்
மொத்தம் – 1,03,489 பேர் ஆகும்.
வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை:
இறப்பு – 206 பேர்.
இடம் பெயர்வு – 13,930 பேர்
இரட்டை பதிவு – 230 பேர்
மொத்தம் – 14,366 பேர் ஆகும்.அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதி 139- திருவரங்கம் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை – 2,83,862 பேர் ஆகும்.
குறைவான வாக்காளர்களை கொண்ட சட்டமன்றத் தொகுதி – 146 – துறையூர் ( தனி) – 2,09,011 பேர் ஆகும்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் மொத்த வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை – 2,785 ஆகும்.வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களை நீக்க தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே நீக்கம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றுகலெக்டர் சரவணன் கூறினார்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு நிகழ்வில்
மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாவட்ட வருவாய் அதிகாரி பாலாஜி,
திமுக மாவட்ட செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, மாநகரச் செயலாளர்கள் மேயர் அன்பழகன், மதிவாணன், பொருளாளர் துரைராஜ், அதிமுக. பகுதி செயலாளர்கள் என். எஸ். பூபதி, ரோஜர் வெங்கட் பிரபு, கருமண்டபம் சுரேந்தர், ஒன்றிய செயலாளர்கள் ராவணன், ஜெயக்குமார் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் எல்.ரெக்ஸ், கே.ஆர். ராஜலிங்கம், தொட்டியம் சரவணன், கோட்ட தலைவர் பிரியங்கா பட்டேல், பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து, பொதுச் செயலாளர் காளீஸ்வரன், மருதை,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், திலீபன் , ரமேஷ், முன்னாள் மண்டல செயலாளர் தமிழாதன், தேமுதிக மாவட்ட தலைவர் பாரதிதாசன், தொழிற்சங்க பேரவை துணைச் செயலாளர் திருப்பதி, கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சிவா, கவுன்சிலர் சுரேஷ்குமார் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் உள்பட கலந்து கொண்டனர்.

