அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பேப்பர் கம்பெனி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் 2 லட்சம் வெள்ளிப் பொருட்கள்ஜெயங்கொண்டம் அருகே சொக்கலிங்கபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் ரகு. இவர் திருப்பூரில் பேப்பர் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த நிலையில் தனது சொந்த ஊரான சொக்கலிங்கபுரம் கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்று விட்டு பின்னர் பூட்டிவிட்டு
திருப்பூர் சென்று விட்டார். இந்த நிலையில் வீட்டில் கரண்ட் பில் குறிப்பதற்காக ரகு வீட்டிற்கு பக்கத்து வீட்டில் உள்ள பெண்மணி பார்க்க வந்தபோது ரகுவின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ரகுவிடம் தகவல் தெரிவித்து பின்னர் போலீசார் வந்து பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த 22 பவன் நகைகள் மற்றும் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் ரூபாய் அறுபதாயிரம் ரொக்க பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இது குறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மீன்சுருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.