Skip to content

மாமியாரின் வக்கிரப் பேச்சால் 22 வயது இளம்பெண் தற்கொலை

கர்நாடக மாநிலம், பீதர் மாவட்டத்தில் உள்ள பசவகல்யாணத்தைச் சேர்ந்த பானிபூரி வியாபாரி சேகர் பாட்டீல். இவருக்கும் பால்கியைச் சேர்ந்த அஞ்சனா பாய் (வயது 22) என்பவருக்கும் 2022-ம் சய் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 மாத குழந்தை உள்ளது.

இந்தநிலையில் சம்பவத்தன்று அஞ்சனா பாய் வீட்டில் இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக அவரது தந்தை விஜயகுமார் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அஞ்சனா பாய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அஞ்சனா பாயின் கணவர், சேகர் பாட்டீல் எப்போதும் வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு 11-12 மணிக்குத்தான் வீட்டிற்கு வருவார். இதனால் அஞ்சனாபாய், அவரை சீக்கிரமாக வீட்டிற்கு வரச்சொன்னார். இந்த விவகாரம் தொடர்பாக அவரது மாமியார் அருணா பாய் என்பவருக்கும் அஞ்சனாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

திருமணத்திற்குப் பிறகு வரதட்சணை கேட்டு அஞ்சனாவை பலமுறை துன்புறுத்தினர். சில நாட்களுக்கு முன்பு, அவரது மாமியார் மருமகள் அஞ்சனா பாயிடம் ரூ .1 லட்சம் தருமாறு கேட்டார். அதை வீட்டிலிருந்து வாங்கி வருமாறு அவர் வற்புறுத்தினார். இதற்கு அஞ்சனா சம்மதிக்காததால், விபசாரத்தில் ஈடுபட்டு அதில் உல்லாசமாக இருந்துவிட்டு அதில் வரும் பணத்தை கொடுக்குமாறு கூறி உள்ளார். இதில் ஈடுபட்டால் தொடர்ந்து பணம் வரும், என்வே இதில் ஈடுபடுமாறு மருமகளை கட்டாயப்படுத்தினார்.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அஞ்சனாபாய் தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து கணவர் சேகர் பாட்டீல், அருணாபாய் மாமனார் சந்திரகாந்த்,மாமியார் அருணாபாய் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடை பெற்று வருகிறது.

error: Content is protected !!