தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பாக 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் மணிவண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில் 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும், 10 சதவீதம் வீட்டு வாடகை படி தொடர வேண்டும், அனைத்து பணியாளர்களுக்கும் இருப்பிடத்திற்கு அருகில் இடம் மாறுதல் செய்ய வேண்டும், மாநில, மத்திய கூட்டுறவு வங்கியில் ஏற்படும் காலிப் பணியிடத்திற்கு 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும், ரேஷன் கடையில் உதவியாளர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும், ரேஷன் கடையில் ப்ளூடூத் முறையை அகற்றி, சரியான எடையில் பொருள் வழங்க வேண்டும், விடுமுறை நாட்களில் பணி செய்வதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
25 கோரிக்கை- தஞ்சையில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..
- by Authour
