Skip to content

வெளிநாடுகளில் இருந்து கடத்தல்…ரூ.1.15 கோடி மதிப்பிலான 272 டிரோன் பறிமுதல்

கோவை விமான நிலையத்திற்கு வரும் விமானத்தில் உயர் ரக டிரோன்கள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. துபாய் மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்த விமானப்பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், சட்டவிரோதமாக 272 உயர் ரக டிரோன்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1.15 கோடி.இந்தக் கடத்தலில் ஈடுபட்ட பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த டிரோன்கள் எதற்காக கொண்டு வரப்பட்டது என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடக்கிறது.

error: Content is protected !!