Skip to content

நிலத்தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெட்டிக்கொலை

நிலத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உறவினர்களால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம், கினோஜ்கர் மாவட்டம், நிலிஜிஹரன் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திர சோரன். இவருக்கும் இவரது உறவினர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நிலம் தொடர்பாகத் தகராறு நீடித்து வந்தது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்தன.

இந்நிலையில், நேற்று மீண்டும் நிலப்பிரச்சினை தொடர்பாக ஜிதேந்திர சோரனுக்கும் அவரது உறவினர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த உறவினர்கள் ஜிதேந்திர சோரன், அவரது மனைவி மற்றும் மகளை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இந்த கோரமான தாக்குதலில் பலத்த காயமடைந்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த மூவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை வழக்கு தொடர்பாக முதற்கட்ட விசாரணையை மேற்கொண்ட போலீசார், முக்கிய குற்றவாளியை உடனடியாகக் கைது செய்தனர். மேலும், இந்த கொலையில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மற்ற நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!