போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நேற்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த மூன்று வாலிபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது செந்தனீர்புரம் அருகே போதை மாத்திரை விற்ற
இதே போன்று அரியமங்கலம் காமராஜ் நகர் முகமதுஅலி தெருவை சேர்ந்த நஸ்ருதீன் (வயது24), அதே பகுதியை சேர்ந்த அசார்முகமது (வயது26) மற்றும் அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் அண்ணா நகரை சேர்ந்த உத்மான்அலி ( 23 )ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்த 110 போதை மாத்திரைகள் ,ஊசிகளை பறிமுதல் செய்தனர்.
புகையிலை விற்றவர் கைது
திருச்சி, பாலக்கரை பகுதியில் புகையிலை விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் நேற்று போலீசார் சோதனை மேற் கொண்டனர். அப்போது காஜா பேட்டை அரசமரத்தடி அருகே புகையிலை விற்ற சங்கிலியாண்டபுரம் அண்ணா நகரை சேர்ந்த மாரியப்பன் (வயது32) என்பவர்ரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 80 கிராம் புகையிலையை பறிமுதல் செய்தனர் பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.
வாலிபருக்கு அரிவாள் வெட்டு
திருச்சி எடத்தெரு பிள்ளை மாநகர் பகுதியை சேர்ந்தவர் மரிய பிரதீஸ் குமார் (43).
மற்றும் வரகனேரி பென்சனர் தெருவை சேர்ந்த பாபு (வயது30 ),காந்தி மார்க்கெட் கல்பாளையம் பகுதியை சேர்ந்த சாம்ராஜ் (22) ஆகியோர் கடந்த
25 ம்தேதி காந்தி மார்க்கெட் எடத்தெரு சாலை அருகே குடிபோதையில் இருந்தனர். அப்போது, அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது .மறுநாள்
பாபு, சாம்ராஜ் இருவரும் வரகனேரி, பிரான்சிஸ் படிப்பகம் அருகே நின்று கொண்டிருந்தபோது, பிரதீஸ் குமார் அவர்களிடம் வந்து,கேள்வி கேட்டுவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில்
பாபு மற்றும் சாம்ராஜ் இருவரும் பிரதீஷ் குமாரை மோசமான வார்த்தைகளில் திட்டி, அரிவா லால் வெட்டினர். இதில், பிரதீஷ் குமாரின் தலையின் வலது பக்கத்தில் வெட்டு காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவுசெய்து பாபு, சாம்ராஜ் ஆகியோரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
கத்தியால் வாலிபரை தாக்கியவர் கைது.
திருச்சி திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுஜேந்திரன் (39). இவர் கடந்த 25ம் தேதி இவரும் இவரது சகோதரரும் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.அப்போது அருணகிரி என்ற மனவளர்ச்சி குன்றிய நபரை அப்பகுதியை சேர்ந்த இருவர்
மதுபோதையில் தாக்கினார். இது குறித்து சுஜிந்திரன்மற்றும் அவரது சகோதரர் அதனை தட்டி கேட்டனர்.
இதனால் கோபமடைந்த இருவரும் சுஜேந்திரனை மோசமான வார்த்தைகளில் திட்டி, கத்தியால் தாக்கினார். இதில் முதுகு, கழுத்துக்குக் கீழே காயங்கள் ஏற்பட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் திரவரங்கம் போலீசார் வழக்கு பதிந்துசோமரசம்பேட்டை அர்ஜுனா தெருவை சேர்ந்த பதன்ராஜ் (19 )கைது செய்தனர். மேலும் திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை கரிகாலன் தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

