போலி பாஸ்போர்ட்டில் வந்த பயணி கைது……
திருச்சிமாவட்டம் முசிறி கோணப்பம்பட்டி முத்துராஜா தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் வேல் வயது 38
இவர் சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் மூலமாக திருச்சி திரும்பினார் அப்போது அங்கு பணியில் இருந்த இமிகிரேஷன் அதிகாரி கோமதி மற்றும் அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை வாங்கி சோதனையிட்டபோது அது திருத்தம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அதைத் தொடர்ந்து கோமதி கொடுத்த புகாரி அடிப்படையில் ஏர்போர்ட் போலீசார் பிரகாஷ் வேலை கைது செய்தனர்
கார்பெண்டர் உள்பட 3பேருக்கு அரிவாள் வெட்டு-பீர் பாட்டில் குத்து.. .
திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்( வயது 36)
இவரது நண்பர் கிஷோர். இவருக்கும் துரைசாமிபுரம் டார்வி னுக்கும் இடையே யார் பெரியவர் என்பதில் முன் விரோதம் இருந்து வந்தது இந்த நிலையில் பாலமுருகன் சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் நகர் நாக காளியம்மன் கோவில் பகுதியில் தனது நண்பர் கிஷோர் ,பிரவீன், ஆரோக்கியராஜ், பாண்டி ,ரபேல் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த டார்வின், வரகனேரி நித்தியானந்தபுரம் ஸ்ரீராம்( 24) பொன்மலைப்பட்டி புது டீசல் காலனி சி பிளாக் பகுதியைச் சேர்ந்த ஜான் பாஸ்கோ (19 ). மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேர் அங்கு வந்தனர் பின்னர் கிஷோரை அவர்கள் தாக்க முயன்றனர்.
இதை பாலமுருகன் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த டார்வின் தரப்பினர், பாலமுருகன்,பிரவீன், ரபீல் ஆகியோரை அரிவாள் மற்றும் பீர் பாட்டிலால் தாக்கினர்.இதில் மூன்று பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இது தொடர்பாக பாலமுருகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீராம், ஜான் பாஸ்கோ,டார்வின் மற்றும் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர் கைதானவர்களிடமிருந்து 2 அரிவாள், மோட்டார் சைக்கிள் மற்றும் பீர்பாட்டல் கைப்பற்றப்பட்டது.
மேலும் கைதான மேற்கண்ட 5 பேர் மீது ஸ்ரீரங்கம் மற்றும் பாலக்கரை போலீசார் தனியார் நிறுவன அதிகாரியின் மோட்டார் சைக்கிளை மிரட்டி பறித்ததாகவும், ஐ.டி ஊழியரை மிரட்டி செல்போனை பறித்து சென்றதாகவும் இரண்டு வழக்கு பதிவு செய்துள்ளனர்.